FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 19, 2011, 01:15:54 AM

Title: ஒரு வார்த்தை சொல்.
Post by: ஸ்ருதி on November 19, 2011, 01:15:54 AM
சொல் உனக்காக காத்திருக்கும்
எனக்கு ஆறுதலான
ஒரு வார்த்தை சொல்...
பல மைல்களுக்கு அப்பால் நீ
கை பேசியை மார்போடு அணைத்து
கவலை மறைத்து
உன்னை நினைத்து
இளமை தொலைத்து
நிம்மதியான வாழ்விற்காய்
போராடும் உன்னை
பிரிந்து போராடும்
என் மனதிற்கு
ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்..
பணத்திற்காய் வாழும் வாழ்க்கை..
பணத்தை வெறுக்கிறேன்
உன்னையும் என்னையும்
பிரிக்கும் பணத்தை வெறுக்கிறேன்...
வந்துவிடு... போதும்
தேடி அலையும் வாழ்க்கை
பணத்தை தேடி நீயும்
உன்னை தேடி நானும்..
வருத்ததோடு வாழும்
நரகம் வேண்டாம்...

Title: Re: ஒரு வார்த்தை சொல்.
Post by: Global Angel on November 19, 2011, 01:31:12 AM
Quote
பணத்தை தேடி நீயும்
உன்னை தேடி நானும்..
வருத்ததோடு வாழும்
நரகம் வேண்டாம்...

nicedi  ;)
Title: Re: ஒரு வார்த்தை சொல்.
Post by: RemO on November 19, 2011, 03:53:53 AM
nalaruku shur
panam vida kaathal thana mukiyam
Title: Re: ஒரு வார்த்தை சொல்.
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:30:11 AM
Emo ur right
panathukaga kathalai Ilamaiyum tholaithu vitu apram oru Kathal vendam


Thanks di Rose