சுவையான... சில்லி சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2012%2F10%2F08-chilli-chapati.jpg&hash=860475e18aa872ad49fbd7dfe242f6bdef912356)
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். பின் சிறிது உப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்
பின் அதில் மிளகாய் தூள், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் விட்டு கிளற வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான சில்லி சப்பாத்தி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் இதனுடன் குடை மிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்து சில்லி சப்பாத்தியை செய்யலாம்.