சோயா சங்ஸ் நியூட்ரி சாலட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F09%2Fzdynmu%2Fimages%2Fp60b.jpg&hash=f04d82d88115c8a6e8daf4308d62753ba49ec424)
தேவையானவை:
சோயா சங்ஸ் - ஒரு கப், ஆப்பிள் - 3, வறுத்த வேர்க்கடலை - அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித் தழை - சிறிதளவு, ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகுப்பொடி - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய செலரி கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை கப், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை:
ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
சோயா சங்ஸை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து, இரண்டிரண்டாக நறுக்கவும். இதனுடன் வேர்க்கடலை, ஆப்பிள் துண்டுகள், செலரி கீரையைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில், வினிகர், உப்பு, மிளகுத்தூள், கடுகுப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனை சோயா சங்ஸ் கலவையில் ஊற்றி, நன்றாக குலுக்கி கலக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.
சோர்வு நீக்கி, உடனடி எனர்ஜி தரும் அருமையான சாலட் இது!