FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 18, 2011, 06:17:13 PM
-
புதுப்பாக்கள்
■அடுப்பில் தூங்கும் பூனை
உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம்
உடைந்த சோற்றுப் பானை
■ வாழும் வரைதான் போராட்டம்
தன்னைச் சுற்ற பூமி மறந்தால்
மண்ணில் சாயும் வேரோட்டம்
■தொடரும் மனக் கவலை
அறுபதாமாண்டு விடுதலை நாளிலும்
தொங்கும் இரட்டைக் குவளை
■ஒன்றாய் இருந்தது ஊர்
தெருத்தெருவாய் பிரித்து விட்டது
அம்மன் கோவில் தேர்
■ஆண் ஆளுமை நாடு
பெண் பிள்ளை மட்டும் ஈனுகின்ற
அரசுத் தொட்டில் கேடு
■தொடரும் ஆண்டைகள் ஆட்சி
எத்தனை கட்சிகள் ஆண்டபோதும்
ஏழைக்கு இல்லை மீட்சி.
rasiththa kavithai ;)
-
தொடரும் ஆண்டைகள் ஆட்சி
எத்தனை கட்சிகள் ஆண்டபோதும்
ஏழைக்கு இல்லை மீட்சி.
ஆண்டைகள் endra enna di ??
-
naanum rasithen angel ;)
// ஆண்டைகள் endra enna di ??//
same doubt
-
aandaikal en raal... aandaadandu kaalam thaangale aala vendum enra veri piditha adchiyalagal ;)