FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: SowMiYa on November 27, 2013, 04:06:48 PM
-
தலைக்கவசம் தரும் நன்மைகள் :
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm4.staticflickr.com%2F3665%2F11082241796_b96b8ecb13_o.jpg&hash=35d9c32cd51d82f1648cb2179a7f2f24aee91de2)
விபத்தின் போது தலையில் ஏற்படும் காயங்களில் இருந்து தப்பலாம். பெரும்பாலும், தலையில் ஏற்படும் காயங்கள் உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும்.
நெடுந்தூரம் பயணம் செய்வதால் முகத்தில் களைப்பு ஏற்படும். தலைக்கவசம் அணிவதால் அதை தவிர்க்கலாம்.
தலைக்கவசம் அணிவதால் எவ்வளவு நெருக்கடியான சாலையிலும், முகத்தில் மாசு ஏற்படாமல், கண்களுக்கு இதமான ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.
மழைக் காலங்களில் மழை பெய்தாலும், எந்த தொல்லையும் இல்லாமல் வாகனம் ஓட்டலாம்.
அதிகாலையில் குளிராக இருக்கும் போதும், பனி பெய்திடும் போதும் காதை ஒட்டி தலைக்கவசம் அணிந்து கொள்வதால் குளிருக்கு நடுங்காமல் வாகனம் ஓட்டலாம்.
தலைக்கவசம் அணிவதால் அலைபேசியில் அழைப்பு வந்தாலும், வாகனத்தை நிறுத்திவிட்டு தான் பேசமுடியும் என்கிற நிலைமை ஏற்படும்.( சிலர் தலைக்கவசத்திற்கு உள்ளே வைத்து கூட பேசுவார்கள். அவர்களை எல்லாம் திருத்த முடியாது )
தலைக்கவசம் அணிந்திருப்பதால் கண்ணாடியை பார்த்து வண்டி ஓட்டும் நல்ல பழக்கம் ஏற்படும். கவனம் சிதறாது.
தலைக்கவசம் அணிந்திருக்கும் போது நாம் மெல்லமாக பேசினாலும், எதிரொலிப்பு காரணமாக ஒலிப்பெருக்கம் ஏற்பட்டு சத்தமாக கேட்கும். இதனால், நாம் பாட்டு பாடலாம். பேசிப் பார்க்கலாம். ஆங்கிலம் பேசிப் பழகலாம். விரும்பியவற்றை செய்துகொண்டே செல்லலாம்.
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய தலைக்கவசத்தை அணிவதற்கு மறுப்பு சொல்லும் நண்பர்கள் பெரும்பாலும் சொல்லக்கூடிய காரணம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்டிப்பழக்கம் இல்லை என்று. சிரமம் பாராமல் இரண்டு நாட்கள் மட்டும் ஓட்டிப்பழகி விட்டால் பின்னர் நீங்களே, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை தொடமாட்டீர்கள்.
தினமும் சராசரியாக அறுபது கிலோமீட்டர் வாகனம் ஒட்டுகிறேன். எவர் எள்ளி நகையாடினாலும், அவசியமில்லை என்று கூறினாலும் ஒரு நாளும் நான் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுவதே கிடையாது.