FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 18, 2011, 12:16:10 PM

Title: ஒரு நட்பான வேண்டுகோள்
Post by: thamilan on November 18, 2011, 12:16:10 PM
கவிதை
நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
நாம் காணும் காட்சிகளின் நிழல்படம்
நம் எண்ணங்களின் எழுத்து வடிவம்

நானும் கவிதை எழுதினேன்
என்பதை விட‌
நானே எழுதினேன்
என்பதில் தான் பெருமை

எத்தனை கவிதை வெளியிட்டேன்
என்பதை விட‌
ஒரு கவிதை எழுதினாலும்
அதை நானே எழுதினேன்
என்பது தான் பெருமை

மற்றவர் எண்ணங்களில்
அவர் கை வண்ணங்களில்
உருவானதை சுட்டு
நம் பெயரில் எழுதுவதும்
மற்ற‌வர் சொத்தை
கொள்ளையடிப்ப்பதும் ஒன்று தான்

மாற்றான் தாய்
தாய் என்றாலும் அவள்
நம்மை பெற்ற தாய் ஆகிவிட மாட்டாள்
எல்லா பிள்ளைகளும்
பிள்ளைகள் தான்
நாம் சுமந்து பெற்ற பிள்ளைகளே
நம் பிள்ளைகள் ஆவார்கள்

அந்த பிள்ளை
கருப்போ சிவப்போ
அழகோ அவலட்சணமோ
அது என் பிள்ளை என்ற‌
பெருமை ந‌ம‌க்கு
க‌விதையும் அப்படித்தான்

ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌
ம‌ற்ற‌வ‌ர் க‌விதைக‌ளை
சுட்டு நிர‌ப்புவ‌தை விட‌
சொந்த‌மாக‌ சிந்தித்து
ஒரு க‌விதை எழுதுங்க‌ள்
அது உங்க‌ள் பேர் சொல்லும்
Title: Re: ஒரு நட்பான வேண்டுகோள்
Post by: RemO on November 18, 2011, 01:36:14 PM
nala kavithai mams

mathavanga karpanaiya thirudurathu thaan periya thiruttu
Title: Re: ஒரு நட்பான வேண்டுகோள்
Post by: Global Angel on November 18, 2011, 05:18:47 PM
:D thamilan nalla kavithai....

apadi kavithai mattavarkalodatha podum pothu padiththu rasithathu enru kurippu koduppathu kooda nanru....  :)
Title: Re: ஒரு நட்பான வேண்டுகோள்
Post by: thamilan on November 18, 2011, 11:05:43 PM
angel
unmai thaan. yaroda kavithai enru poodatium paravaailla. padithathil rasithathu enru sari poodalamai