FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on November 24, 2013, 10:59:46 AM
-
நெடுநாள் கழித்து
இன்று...
என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_VABrPZnj4j0%2FSs7zj0e2GGI%2FAAAAAAAAB9I%2Fer2fHcpRUZU%2Fs400%2Famalarnews_78355044127.jpg&hash=a7432cab316ce7c37cecfe1ee13a24b610df0c61)
பறவைகள் அப்படியே
மனிதர்கள்
பூக்களும் கூட.
மாறச் சாத்தியம் இல்லை.
நானும் அப்படியே.
சாலைகள் கொஞ்சம் ஒடுங்கிவிட்டதோ
மலைகள் கொஞ்சம் மெலிந்திருக்குமோ
காடுகளிடை வீடுகளோ
என்பதைத் தவிர.
நீண்டு வளைந்த காலம்
சிறு வழி
பின் பெரு வெளி தாண்டி
வெயிலும் மழையுமாய்
சேற்றுக் கிடங்குகள் கடந்து
கற்கள் அகற்றி
விவாதங்களை வேதனைகளை
குடைகளாய்
விரித்து மடக்கி
ஆசை கனவு காதல்
வெட்கம் வேதனை உட்புகுத்தி
என்னையே எனக்கு அறிமுகமாக்கி,
நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!
-
நல்ல கவிதை மாறன். தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் .
-
super poem maran.. thodarnthu eluthnga..
(https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTskoBzri7JGREJGYFkAY7r2UGl_XeWV5CYlvM4BPOyAWUEUDUwQA)
-
arumaiyana kavithai maran