FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:56:28 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.greenpharmacy.co.in%2Fproduct_images%2Fmother_child.gif&hash=c1f516f4e1aab42c79c213f1acdf5d301d36c391)
பளிச்சென பார்ப்பவர்
கண்களை வசீகரிக்கும்
காந்த பார்வையாம்
பட்டு கைகளாம்
சிவந்த உதடுகளாம்
முல்லை பூ சிரிப்பாம்
ரோஜாவின் நிறமாம்
கரு மேக கூந்தலாம்
தூக்கத்தில் சிரிக்கும்
அழகு தேவதையாம்
கண்தெரியாத அரசி
ஈன்றெடுத்த அழகு தேவதையாம்
காண கண் கோடி வேண்டுமென
அடுத்தவர் சொல்லில்
அகம் மகிழ்ந்து
நிச்சயம் அழகுதான்
தன் குழந்தையென
மனக்கண்ணில்
தேவதையை
கொஞ்சும் பார்வையில்லா
அன்புத்தாய்..
-
paarvai ilaiyenraalum thaai thaane :)
-
wow nalaruku shur
-
thanks thanks Rose and EMo