FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:51:47 AM
-
அன்பே,
ஆருயிரே
கண்ணாளனே,
என்னவனே,
இனியவனே,
என் இதயமே,
என் சுவாசமே,
என் உயிர் மூச்சே,
என் உயிரே,
உன் நினைவால் வாடுகிறேன்
நீயில்லாமல் நான் இல்லை..
தனியே சிரிக்கிறேன், அழுகிறேன்..
என் வாழ்வே நீதான்...
உன்னோடு வாழாத
வாழ்வு வாழ்வே இல்லை...
உனக்காக எழுதுவது எல்லாம்
கவிதையாகிறது...
இப்படியே காதல்மொழிபேசி
அலுத்து போய்விட்டது....
புதிதாய் ஒரு வார்த்தை தேடுகிறேன்..
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...
-
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...
shabaa arampathula irunthaa ;D
-
yara kupidura
yarathu irukingala
-
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...
shabaa arampathula irunthaa ;D
yara kupidura
yarathu irukingala
Daily calling but varamatrangale da EMo enna panna :D
-
phone no ena nu solu :D nan call pani vara venanu soliduren
-
வெறும் வார்த்தை வர்ணிப்புகளில்
வேலையை( நேரம் ) விறையமாக்காமல்
விழி வழியாய் விசேஷ வார்த்தையால்
மௌனமொழி வாள் வீசுவதாய் வாக்குறுதி வழங்கு வண்ணநிலவே !
வரவேற்பே வேண்டாம் ,விலாசமும் வேண்டாம்
வீதி வீதியாய் விசாரித்து
உன் வீட்டுவாசலில் வந்து நிர்பேன்
உன்னை விரும்பும் விசனன் நான் .
-
;D ;D ;D ;D ;D ;D ;D
-
onnumey puriyala forum la
enamo nadakkuthu marmama irukuthu :D
-
aiyayoooo nan onum pannala
da :D Emo and rose:S:D ;)
aiooo ajithh :D
-
விவகாரமாய் ஏதும் விவரித்துவிட்டேனா? - இல்லை
விரசமாய் ஏதும் வெளிபடுத்திவிட்டேனா?
வில்லங்கம் ஏதும் விலைக்கு வாங்கிவிட்டேனா?
விழி படை(டி)த்தொறேல்லாம் விளங்கிகொல்லும்ப்டி
விவரமாய் ,விரிவாய் ,விளக்கமாய் தானே வரி வரைந்திருந்தேன் ?
விமரிசனம் ஏதும் வெளிவரவில்லை !
வெளிவந்த விமரிசனமும் விளங்கவில்லை !
வெளிப்படையாய் யாரும் விமரிசனத்தை வெளிபடுதுங்களேன் !
-
கவிதை பல புனைந்து
கேட்கும் கேள்வி விளங்கி
விடை தெரியாமல்
மழலைப் போல்
என் மனம் இருக்க
உன் கவிதைக்கு
ரசிகையாய் நான் :)
-
மற்றவருக்கு விளங்காமல்
குறிப்பை குறிப்பாய் குறிப்பிட்ட
இசைக்கு மட்டும் கூற
ஆசை
படும் நீங்கள்
சொல்லும் குறிப்பை
புரிந்தும் புரியாமல் பலர்
அந்த பலரில் நான்
-
கவிக்கு கவி விளங்கி
பதில் கவிபாட கருத்திலயாம் ..
அந்தோ விந்தை ...
கவிதைக்கு கவி இல்லையாமே ..
விளங்கியும் விளங்காமல்
நானும் அதில் ஒருத்தியாகி
புன்னகையில் என் பதிவாக்கி உள்ளானே ...
இன்னுமா புரியவில்லை... ;) ;D ;D ;D
-
என்னை உணரா
உள்ளங்கள் போல
இக்கவிக்கு
அக்கவியின் கவிதை
புரிந்தும் புரியாமல்
இருப்பதே
நலம் அல்லவா
புன்னகை உதிர்க்கும் மலரே
புரிவாய் என நம்புகிறேன் :) ;) ;) ;)
-
குழலை விஞ்சும் குரலை கொண்டவள் ,
தன் குரலில் பலருக்கு வாழ்த்தும் வழங்கினாள்
தழலை தணிக்கும் குளிர் கவிதை வரிகளை
தளத்தில் தெளித்து வேளிரும் குளிரினை வாரி வழங்கினாள்
சுழலை சமாளிக்க தலை சுத்தும்போதேல்லாம்,
தளத்தில் கவிதைகளை தரிசிக்க தந்தவள்
சூழலை மறந்து, மனதை திறந்து வரிகளை வைத்து
கவிதையாய் சொன்னதற்கு மலர்கொத்து தந்தவள்
மழலை மனம் தனதென்றும், கவி ரசிகை (தா)நான் என்பதும் ,
புரிந்தும் புரியாமலும் இருப்பதே நலம் என்றும் புன்னகை பூத்தவளுக்கு
புரியவைக்கவா ?
விழளைதான் வீணாக (கவி) நீர் இறைத்து வளர்கின்றாய்
என்பதை விசணன் எனக்கு விரிவாய் விவரிக்கவா?
-
என்னை உணரா
உள்ளங்கள் போல
இக்கவிக்கு
அக்கவியின் கவிதை
புரிந்தும் புரியாமல்
இருப்பதே
நலம் அல்லவா
புன்னகை உதிர்க்கும் மலரே
புரிவாய் என நம்புகிறேன்
நமக்கு புரிதலில் குறைவில்லை ..
இருந்து விழலுக்கு இறைத்த
வெறும் நீர்போல்
அய்யன் அகம் கொண்ட
அன்பு கவிதைகளும்
காற்றோடு கலந்து
கவி தழுவி செல்கிறதே ...
உன் அறிந்தும் அறியாமை
அங்கு புரிந்தும் புரியாமை ஆகி
தெளிந்தும் தெளியாமல்
கேள்விக் கணைகள் பார்த்தாயா ...
என்ன சொல்ல போகிறாய் ...
காத்திருக்கிறேன் ..
அக்கவிக்கு இக்கவியின்
பதில் என்னவென்று .....ஹஹ்ஹா
-
கவிக்கு கவி
புரியாமல் இருக்குமோ??
கவியும் புரியும்
கவியில் வினாவும்
கேள்வியும் புரியும்
அக்கவியின் கவிக்கு
இக்கவியின் பதிலை
அறிய இங்கு பல கவிகள்
கூடி கவிமழை பொழியும் பொழுது
கவிமழையை நிறுத்த மனம் இல்லாமல்
மௌனத்தை மொழியாக்கி விடவா?? :P :P ;) ;) ;)
-
மழை பொழிய
கார் முகில் தேவை
கவி மழை பொழிய
கவிதையின் கவிதை தேவை ..
கார் முகிலாக நீ மறுத்தல் மௌனித்தால்
கவிமழை பொழிவது எப்படியோ ..?
-
மழை பொழிய
முகில் மட்டும் அன்றி
தென்றலாய் தீண்டும் காற்றும் தேவை
ஆசையாய் காற்றை
எதிர்நோக்கி பலர் காத்திருக்க
வீசாமல் வேலை நிறுத்தம்
செய்யும்போது
கவியின் மழை எப்படி சாத்தியம் ..?
-
வசந்தத்தை வரவேற்க காத்திருக்கும் வாசமலரை போல
மொட்டு மலரின் மொட்டவிழ காத்திருக்கும் வண்டினம் போல
அலையின் அணைப்பிர்காக ஆவலோடு காத்திருக்கும் கரையை போல
ஒருமுறையானாலும் முழுபிறையாய் வெளிவர காத்திருக்கும் முழுமதி போல
கேள்வி ஒன்ன்றை கேட்டுவிட்டு பதில்கிடைக்க காத்திருக்கும் அப்பாவி ஆசை(அஜீத்) போல
காத்திருந்தால்,தென்றல் காற்றும் , தீண்டும் கவிதையும் கனநேரத்தில் கண்முன் காணக்கிடைக்கும் ...
-
மலரை மொய்க்கும் வண்டுவாய்
கரையை அணைக்கும் அலையாய்
தேய்பிறை காணாத நிலவாய்
இத்தனை உவமைக்கு
பொருள் அறிந்தும்
கவி மழை நிறுத்த இயலுமோ??
அழகு தமிழை அனுதினமும்
படித்து செல்கிறேன்
விளக்கம் புரிந்தும் புரியாமலும்
இருக்க பயின்று வருகிறேன் ;) ;) ;) ;)
-
அந்தோ பரிதாபம்
விளக்கம் புரிந்தும்
புரியாமல் நீ
எனக்கோ மனதுள் கலக்கம்
எங்கே காந்தம்போல்
கவி எழுதும் அக்கவிஞன் நிலை ...
கானல் நீராகுமா ...
இல்லை கவிதை கிறுக்கியே
கீழ்பாக்கம் பொய் சேருமா ...?
-
கவிதை என்றும் அழிவதில்லை
நீங்காத நினைவுகளாய் நெஞ்சில்
நிற்கும் என்றென்றும்
காதல் கவிதை படித்தால்
படைத்தால் கீழ்பாக்கம்
ஒன்று தான் முடிவு என்றால்
கண்ணதாசன் முதல் வைரமுத்துவரை
அங்கே அனுமதிக்காக
அல்லாடியிருபார்களோ ??
-
கவிதை படித்தவன்
கீழ்பாக்கம் போவதில்லை
கவிதையோடு காதல்
படைத்தவன் அடிக்கடி
அங்கு தானே அனுமதிக்கப் படுகின்றான் ...
பொறுத்துதான் பார்ப்போமே
எங்குதான் அனுமதி என்று
இதயத்திலா ....
இல்லை இளவல் பாக்கத்திலா .....
-
காதலும் உணர்வுதான்
கவிதையில் சொல்ல
கவிதையில் சொல்லும்
காதல் எல்லாம்
என் கண்ணில்
கவிதையாகவே தெரிய
இதயத்தில் இடம்
எங்கனம் சாத்தியமாகும்? ;) ;) ;) ;)
-
நினைக்க மறந்த இதயம்
துடிக்க மறந்தால்
நினைக்கும் வேலை
மிச்சம்.. ;) ;) ;) ;)
-
மறக்க நினைக்காத இதயம்
நினைக்க மறந்தால்
இதயம் , துடிக்கும் வேலை
மீதம் ...
-
உதிரம் வர மறுக்கிறது
உதிர்ந்த போன
வார்த்தைகளால்...
மரித்த இதயத்துக்கு
மறுவாழ்வா... ;)