மல்டி சீரியல்ஸ் நியூட்ரி ஜாமூன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fndmxzj%2Fimages%2Fp129a.jpg&hash=6a7417248168fc8a911d6bfbe2b526158c3643d7)
தேவையானவை:
ஆச்சி நியூட்ரிமால்ட் ஸ்ப்ரௌட்டட் சீரியல்ஸ் மிக்ஸ் - 200 கிராம், புழுங்கலரிசி மாவு - 100 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், கருப்பட்டி - கால் கிலோ, ஏலக்காய் - 3.
செய்முறை:
ஆச்சி நியூட்ரிமால்ட் ஸ்ப்ரௌட்டட் சீரியல்ஸ் மிக்ஸ், புழுங்கலரிசி மாவு, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, ஜாமூன் சைஸில் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். கருப்பட்டியை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, அதில் வேக வைத்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கினால்... சுவையான மல்டி சீரியல்ஸ் நியூட்ரி ஜாமூன் ரெடி.