FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:47:21 AM

Title: கவிதை சிலை நீ.....
Post by: ஸ்ருதி on November 18, 2011, 12:47:21 AM
கவிதை சிலை நீ.....
உன்னை நினைத்து
நான் வடிக்கும்
கவிதை சிலை நீ.....

எழுத்து உளியால்
பார்த்து பார்த்து
வடித்த சிலை
நீ.......

ஒரு நாளும்
சிதையாமல்
நான் பாதுகாக்கும்
பெட்டகம் நீ.....

ஓங்கி அடித்தால்
உனக்கு வலிக்குமோ என்று
என் வார்த்தை
உளீயை பார்த்து பார்த்து
செதுகுகிறேன்....

ஒவ்வொரு முறையும்
முடிவு பெறாத
சிலையான உன்னை
மீண்டும் ஒரு முறை
வலம் வந்து
சரி பார்ப்பேன்.......

இது வரை எனக்கு
தெரிய வில்லை
என்னில் என்ன பிழை......????

சிலையை முடிக்க
உன் சிலை கண்ணை
துறக்க நாள் பார்த்து
வந்தேன்.......

நல்ல நாள் என்று
கண்ணையும்
துறந்தேன்.....

முழு சிலையும்
முடிவுப் பெற்ற
திருப்தியில் நான்.......

உனை அழைத்து
வந்து காண்பிக்க
எண்ணி உன் கை
பிடித்து வந்தேன்.....

உன் கைப்பற்ற
நினைத்து
உன் கையை
தேடினேன்...........

இன்று வரை
எனக்கு கிடைக்காத
தூரத்தில் நீ.......
துயரத்தில் நான்.......

நான் அழிந்தாலும்
உனக்காக நான்
வடித்த.......
என் கவிதை
சிலை அழிவது இல்லை.......

Title: Re: கவிதை சிலை நீ.....
Post by: Global Angel on November 18, 2011, 04:32:20 AM
Quote
இது வரை எனக்கு
தெரிய வில்லை
என்னில் என்ன பிழை......?



eakum thaan theriyavillai.. num sarivaruthila hmm hm  ;D
Title: Re: கவிதை சிலை நீ.....
Post by: RemO on November 18, 2011, 02:14:45 PM
nalaruku shur ana kadaishivaraikum antha silai yarunu solalaye
Title: Re: கவிதை சிலை நீ.....
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:40:08 AM
nalaruku shur ana kadaishivaraikum antha silai yarunu solalaye
Quote
இது வரை எனக்கு
தெரிய வில்லை
என்னில் என்ன பிழை......?
eakum thaan theriyavillai.. num sarivaruthila hmm hm  ;D

antha silai en My Dream boy :D:D
Title: Re: கவிதை சிலை நீ.....
Post by: RemO on November 19, 2011, 12:54:53 PM
aiyo pavam yar antha payan :D