FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on November 19, 2013, 11:17:28 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 19/11/2013 (19th Nov)
Post by: kanmani on November 19, 2013, 11:17:28 PM
இன்றைய ராசி பலன்கள் - 19/11/2013 (19th Nov)


மேஷம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசினப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.


மிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அசதி, சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


கடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சொந்த, பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங் களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மற்றவர் களை பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.


கும்பம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாப மடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த,பந்தங்களால் மதிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.