FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 18, 2011, 12:44:02 AM
-
சிறகு முறிந்த பறவை....
ஆறு வயதில் பறக்க நினைத்து
சிறகை விரித்தேன்...
அப்பா தடுத்தார்
குழந்தை என்று....
ஈராறு வயதில் சிறகை விரித்தேன்
அம்மா தடுத்தார்
பருவப் பெண் என்று...
மூவாரு வயதில் தடுத்ததோ
சகோதரன்...
காரணம் மணப்பெண்....
நான்காறு, ஐந்தாறில்
சிறகைத் தடுத்தன
குடும்பமும், குழந்தைகளும்....
பணிகள் முடிந்த, பத்தாறு வயதில்
சாவகாசமாய்
சிறகை விரித்தேன்.....
முடியவில்லை....
ஏனெனில் நானொரு
சிறகு முறிந்த பறவை....
-
nice di nalla iruku ;)
-
nalaruku shur
very nice
-
nalaruku shur
very nice
nice di nalla iruku ;)
thanks thanks Rose and emo ;) ;)