FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 18, 2013, 08:17:02 PM

Title: ~ பல் வலியைக் குறைக்க இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on November 18, 2013, 08:17:02 PM
பல் வலியைக் குறைக்க இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/1450789_641162039239448_469768884_n.jpg)


பொதுவாக பல் வலி என்பது எல்லோருக்குமே வரும் ஒரு தொந்தரவுதான். பல் சொத்தை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கூட திடீரென பல் வலி ஏற்படலாம்.

பொதுவாக பல் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏன் என்றால், பல்லில் ஏற்படும் சில பிரச்சினைகள் காரணமாக, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும். எனவே பிரச்சினை எழுந்ததுமே பற்களை சுத்தம் செய்வது, சொத்தைப் பற்களுக்கு சிகிச்சை செய்வது நல்லது.

உங்களுக்கு பல் வலி ஏற்படுவது வழக்கமாக இருந்தால்...

உங்கள் உணவில் ஜங்க் புட் எனப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சியான, அதிக சூடானப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

அதிக இனிப்பான அல்லது புளிப்பான உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். சில பச்சைக் காய்கறிகள் அல்லது கொய்யாக்காய், வெள்ளரி போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுவது வாய்க்கு நல்லது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, திடீரென ஏற்படும் பல் வலியில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற சில நல்ல வழிகள் உள்ளன.

அவற்றைப் பார்ப்போம்..

பல் வலி ஏற்படும் போது வலி இருக்கும் கன்னத்திற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

இலவங்க எண்ணெயுடன் (க்ளோவ் ஆயில்) ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து வலி உள்ள பல்லில் வைத்தால் வலி உடனடியாகக் குறையும்.

சில சமயம் தாங்க முடியாத வலி ஏற்படும் போது சில சொட்டு எலுமிச்சை சாறை பற்களில் விடுவதால் வலி குறைய வாய்ப்பு உள்ளது.

பல் வலிக்கும் அல்லது ஈறு வலிக்கும் இடத்தில் ஒரு சிறிய துண்டு வெங்காயத்தை வைத்தாலும் நிவாரணம் கிடைக்கும்.