FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 17, 2013, 11:10:45 PM
-
தெற்காசியாவில் அதிக அளவு உண்ணப்படும் காய் - முருங்கை. ‘வைட்டமின் சி’ நிறைந்த முருங்கைக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம், மேக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவையும் உண்டு.
முருங்கைக்காய் ஊறுகாய்
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 10
நல்லெண்ணெய் -
50 மி.லி.
மிளகாய் வற்றல் - 4
எலுமிச்சைப் பழம் - 1
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள்,
தனிவற்றல் பொடி,
கடுகு, கறிவேப்பிலை,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிய பின், தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் விலக்கி, அதன் சதைப்பாகத்தை ஒரு ஸ்பூனினால் வழித்து எடுத்து வைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், காரத்துக்குத் தேவையான தனி வற்றல்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடாயில் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். மஞ்சள், வற்றல்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்த கலவையை கடாயில் இடவும். நன்றாக வதக்கி எண்ணெய் கக்கும்போது தேவையான அளவு எலுமிச்சைச்சாறு கலக்கவும். இப்போது சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் தயார்!
முருங்கைக்காய் சூப்
முருங்கைக்காய் வேக வைத்த நீரை கீழே கொட்ட வேண்டாம். வேக வைத்த காய்களைத் தனியாக எடுத்துக்கொண்ட பிறகு, அந்த நீரில், சிறிது சதைப்பகுதி சேர்த்து, ஒரு ஸ்பூன் மைதா சேர்க்கவும். நீர் கொதிக்கும்போது மிளகுத்தூள், உப்பு சேர்த்தால் சுவையான முருங்கைக்காய் சூப் தயார்.
முருங்கைக்காய் சாதம் 3 வகை!
1. பொரியல் செய்து எடுத்த கடாயில் சிறிது சாதத்துடன் பொரியல் சேர்த்து முருங்கைக்காய் சாதம் செய்யலாம்.
2. தொக்கு செய்து எடுத்த கடாயில் சிறிது சாதம் சேர்த்து கிளறினால் தொக்கு முருங்கைக்காய் சாதம் தயார்.
3. ஊறுகாய் செய்து எடுத்த கடாயில் சிறிது சாதம் சேர்த்துப் பிசைந்தால் முறுங்கைக்காய் ஊறுகாய் சாதம் ரெடி!
முருங்கைக்காய் கறி
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 3
அரைக்க:
தேங்காய் - கால் மூடி
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 2
புளி - கோலிகுண்டு அளவு
சாம்பார்பொடி - 2 ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
முருங்கைக்காயை கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அரைக்கக்கொடுத்த அனைத்தையும் அரைக்கவும். காயுடன் சேர்த்து உப்பும் சேர்த்து வேக வைக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பறிமாறவும்.
முருங்கைக்காய் தொக்கு
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 3
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1/2
தக்காளி - 1
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் வற்றல் - 1
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
தனிவற்றல்பொடி - 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வேக வைத்து எடுத்த முருங்கைக்காய் சதைப்பகுதியை நன்றாக ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியே அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வற்றல் கிள்ளிப் போடவும். அரைத்த விழுதுகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். மஞ்சள்பொடி, தனிவற்றல்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.