FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 18, 2011, 12:26:02 AM

Title: கட்டுண்டேன் காதலில்
Post by: thamilan on November 18, 2011, 12:26:02 AM
உன் முந்தானை முடிச்சில்
முடிபட்டேன் நான்
முடிச்சவிழ்க்க நீயும் விரும்பவில்லை
முடிச்சவிழ நானும் விரும்பவில்லை

உன் சுருள் கூந்தலில்
சிக்குண்டேன் நான்
சிக்கெடுக்க நீயும் விரும்பவில்லை
சிக்கிலிருந்து விடுபட‌
நானும் விரும்பவில்லை

உன் வலை வீசும் கண்களில்
அகப்பட்ட மீனானேன் நான்
வெளியே எடுத்துவிட‌
நீயும் விரும்பவில்லை
வெளிவர நானும் விரும்பவில்லை

உன் காந்த புன்சிரிப்பில்
ஒட்டிக் கொண்ட இரும்பானேன் நான்
ஒதுக்க நீயும் விரும்பவில்லை
ஒதுங்க நானும் விரும்பவில்லை

என்னை கட்டிப் போடுவது
உனக்கு சுகம்
உன்னில் கட்டுண்டு கிடப்பது
எனக்குச் சுகம்

காதலில் கட்டிப் போடுவதை விட‌
கட்டுண்டு கிடப்பதே
பேரின்பம்
Title: Re: கட்டுண்டேன் காதலில்
Post by: Global Angel on November 18, 2011, 02:06:08 AM
Quote
காதலில் கட்டிப் போடுவதை விட‌
கட்டுண்டு கிடப்பதே
பேரின்பம்

rialy nice and tru  ;) :D