FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on November 17, 2013, 11:05:56 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 17/11/2013 ( 17th Nov)
Post by: kanmani on November 17, 2013, 11:05:56 PM
இன்றைய ராசி பலன்கள் - 17/11/2013 ( 17th Nov)


மேஷம்: இரவு 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். இரவு 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். 


கடகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். 


கன்னி: இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.   



துலாம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். இரவு 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் போராடி வெல்லும் நாள்.   



விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளை களால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.


தனுசு: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களை கட்டும். உங்களை சுற்றி
யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாப மடைவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். 


மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரி உதவு வார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மனைவி வழியில் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.



மீனம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.