ஓட்ஸ் ஃபைபர் அடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Fdec%2F04122009%2Favl70a.jpg&hash=78289fed7505e3f01ba27a7304924b575254d5f4)
தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், பொட்டுக்கடலை, பச்சரிசி - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 1, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஓட்ஸ், பச்சரிசி, பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
தோசைக்கல்லை காய வைத்து, எலுமிச்சையளவு மாவை எடுத்து சின்ன அடையாகத் தட்டி போட்டு இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். (இதற்கு எண்ணெய் அதிகம் தேவையில்லை. சிறிதளவு தெளித்தால் போதும்).