வேர்க்கடலை பொடி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi76.servimg.com%2Fu%2Ff76%2F13%2F02%2F10%2F42%2Fe_138010.jpg&hash=1c9f9fbffec11c1d182849089c9c85046ff555c8)
தேவையான பொருட்கள்:
வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - இரண்டு கப்,
வறுத்த வெள்ளை எள் - ஒரு மேஜைக் கரண்டி,
காய்ந்த மிளகாய் - ஆறு (வெறும் வாணலியில், லேசாக வறுக்கவும்),
பூண்டு - ஆறு பல்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மிக்சியில் நைசாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில், சிறிது நெய் விட்டு, வேர்க்கடலை பொடியை போட்டு, பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும்.