FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 14, 2013, 04:49:50 PM

Title: ~ தும்பைப் பூ--இய‌ற்கை வைத்தியம்: ~
Post by: MysteRy on November 14, 2013, 04:49:50 PM
தும்பைப் பூ--இய‌ற்கை வைத்தியம்:

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/1471115_638148326207486_1571981284_n.jpg)


தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்