FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 13, 2013, 09:30:08 PM

Title: ~ நினைவாற்றல் பெருக ~
Post by: MysteRy on November 13, 2013, 09:30:08 PM
நினைவாற்றல் பெருக

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/1467330_550071725074128_1531813589_n.jpg)


திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். அமுக்கிராங்கிழங்கு சூரணம் இரண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடடுத்து, 200 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்த்து, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வைத்துவிட வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலை-மாலை என சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டால் சிலநாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.