FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on November 13, 2013, 10:30:07 AM

Title: இன்றைய ராசி பலன்கள் - 13/11/2013 (Nov 13th)
Post by: kanmani on November 13, 2013, 10:30:07 AM
இன்றைய ராசி பலன்கள் - 13/11/2013 (Nov 13th)


மேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.


மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சாதிக்கும் நாள்.


கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


கன்னி: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


துலாம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வழக் கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியா பாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார் கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மூத்த அதிகாரி பாராட்டுவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.


மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவு கள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர் களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.