FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 11, 2013, 09:08:51 AM
-
அவரைக்காய் - 100 கிராம்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கடலைப் பருப்பு - கால் கப் + ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கல் உப்பு - ஒன்றேகால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கராண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
அவரைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பு வெந்ததும் குக்கரை திறந்து அவரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய் தூள், முக்கால் அளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். மீதியுள்ள வெங்காயத்தை தாளிப்பதற்கு எடுத்து வைக்கவும்.
குக்கரை மூடி வெய்ட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்திருப்பதால் அதிக நேரம் வேகவைக்கத் தேவையில்லை. காய்கள் வெந்தால் மட்டும் போதும்.
காய்கள் வெந்ததும் 5 நிமிடங்கள் கழித்து திறந்து தேங்காய் சோம்பு விழுதை ஊற்றி கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து கூட்டில் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது புளிக்குழம்பு, வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.