FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 09, 2013, 08:30:18 PM

Title: ~ உடல் இளைக்க கரும்பு சாப்பிடுங்க..! ~
Post by: MysteRy on November 09, 2013, 08:30:18 PM
உடல் இளைக்க கரும்பு சாப்பிடுங்க..!

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/1455064_547276855353615_1613292296_n.jpg)


குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.