FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 09, 2013, 01:42:24 PM

Title: ~ மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...அழகு குறிப்புகள்....! ~
Post by: MysteRy on November 09, 2013, 01:42:24 PM
மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...அழகு குறிப்புகள்....!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F11%2F09-1383977246-1-footscrub.jpg&hash=3bbdeb72abc69ae83d0225d30df80e16afaf3b08)


குளிர்க்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது. அதிலும் தற்போது சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு பல்வேறு மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன. அதுவும் சருமத்தின் வகைகளுக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஆகவே அதனைப் பயன்படுத்தினால், வறட்சியைப் போக்கலாம்.
ஆனால் பாதத்தில் ஏற்படும் வறட்சிகளைப் போக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் பாதத்தில் வறட்சி ஏற்பட்டால், அது குதிகால் வெடிப்பை ஏற்படுத்தி, பாதத்தின் அழகையே பாழாக்கிவிடும். ஆகவே இத்தகைய குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சியை தடுக்க ஒரு சில செயல்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் மென்மையான பாதங்களைப் பெற முடியும்.
சரி, இப்போது மென்மையான பாதங்களைப் பெற என்ன செயல்களையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...

வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்

தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் தளர்வடைந்து, எளிதில் வெளியேறி, பாதங்களை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

 எலுமிச்சை

பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, நன்கு துணியால் துடைத்துவிட வேண்டும். பின் எலுமிச்சை துண்டை எடுத்து சர்க்கரையில் தொட்டு, பிறகு பாதங்களை தேய்த்தால், பாதங்களில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும். இந்த முறையை தொடர்ச்சியாக செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் தெரியும்.

ஸ்கரப் செய்த பின்னர்...

மேற்கூறிய முறையை செய்த பின்னர் தவறாமல் வெதுவெதுப்பான நீரால் பாதங்களை மீண்டும் அலச வேண்டும். இதனால் அது பாதங்களை பொலிவோடும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மசாஜ் செய்யவும்

பின்பு தவறாமல் சிறிது ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

இயற்கை வைத்தியம்

ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும 2 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, பாதங்களில் தடவி சிறது நேரம் ஸ்கரப் செய்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் வெளியேறிவிடும். அதிலும் இதில் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.