சாம்பார் பொடி! பொடி வகைகள்!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-9cTyNXWbpps%2FUns_WyKac1I%2FAAAAAAAAODU%2Fzje7qpWZjl4%2Fs320%2Fsambhar-podi-ingredients.jpg&hash=a520bc2cc21e799ba81b050fcfb3a81d91bf3ed0)
தேவையான பொருட்கள்:
தனியா - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - எட்டு
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
பெருங்காயம் தூள் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்தால் மணக்கும் சாம்பார் பொடி தயார்.
பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.