வாழைப்பூ முட்டை பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-xw1NX8-UOec%2FUns-R9IMFvI%2FAAAAAAAAODI%2FZm2borXuLyU%2Fs1600%2Fvalaipoo%2Bporiyal.jpg&hash=f0f93742b37020d9b893ca581ca32f422ce210a3)
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/4 கப்
மிளகு தூள் – 1ஸ்பூன்
கறிமசாலா தூள் – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
முட்டை – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவில் நடுவில் உள்ள காம்பை அகற்றி விட்டு சிறியதாக நறுக்கி தயிர் கலந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்… இல்லையெனில் வாழைப்பூ கறுப்பாகி விடும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து சிவந்ததும் கறி மசாலா தூள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கிய பின்பு வாழைப்பூ, உப்பு சேர்த்து ஈரப் பதம் நன்கு மாறும் வரை வதக்கவும்… அதனுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு உதிரியாக வரும் வரை வதக்கவும்.
கடைசியாக மிளகுதூளை தூவி நன்கு கிளறி இறக்கவும்…
இந்த பொரியல் எல்லா வகை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.