வரகு ஸ்கொயர்
தேவையானவை:
வரகு - அரை கிலோ, வெள்ளை உளுந்து - 200 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு, வெந்தயம் - தலா 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 7 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வரகை கழுவி காய வைத்து ரவையாக திரிக்கவும். உளுந்து, கொள்ளு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து, அதில் ரவையாக திரித்து வைத்துள்ள வரகு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கரைத்து, புளிக்க வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடேறியவுடன் மிளகு, சீரகம் தாளித்து... பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி, புளித்த மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தட்டில் நல்லெண்ணெய் தடவி, ஆறு கரண்டி மாவை ஊற்றவும். இட்லி பானையில் நீர் விட்டு, அதன் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து நீர் விட்டு, வரகு மாவு ஊற்றிய தட்டை மேலே வைத்து, அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி வைத்து, வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும். இதுபோல் எல்லா மாவையும் ஊற்றி வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும்