FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 08, 2013, 07:18:55 PM

Title: ~ பிரெட் பனீர் டிலைட் ~
Post by: MysteRy on November 08, 2013, 07:18:55 PM
பிரெட்  பனீர் டிலைட்

தேவையானவை:
பிரெட் - 3 ஸ்லைஸ், பனீர் - 100 கிராம், பெங்களூர் தக்காளி (நன்கு பழுத்தது) - 3, பெரிய வெங்காயம் - 2, நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க் கரை, சோம்பு - தலா அரை டீஸ்பூன், சோள மாவு, உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய் - தலா 2.

அலங்கரிக்க:
மெல்லியதான சேவ், கொத்தமல்லி, துருவிய சீஸ் - தேவையான அளவு.

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக 'கட்’ செய்யவும். பனீரையும் சிறுசிறு க்யூப்களாக வெட்டவும். வெங்காயம், தக் காளியை மிகவும் மெல்லியதாக, பொடியாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பிரெட்டை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பனீரையும் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு, பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,  பின்னர் தக்காளியை சேர்த்து, உப்பு, வறுத்து பொடி செய்த மசாலா பொடியை சேர்த்து... தக்காளி சிறிது குழையும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும் (கிரேவி நீர்க்க இருந்தால் சிறிது சோளமாவை தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்).
ஒரு கப்பில் சூடான கிரேவியை ஊற்றி, அதில் தேவையான அளவு பிரெட், பனீர் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் மெல்லிய சேவ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய சீஸ் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.