FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 06, 2013, 06:22:05 PM

Title: ~ பற்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்:- ~
Post by: MysteRy on November 06, 2013, 06:22:05 PM
பற்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்:-

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/1451412_635145556507763_596954744_n.jpg)


பல்போனால் சொல் போய்விடும் என்பார்கள், அதாவது திருத்தமாகப் பேச முடியாது. மேலும் முழுமையான ருசியையும் உணர முடியாது. கடினமான பொருட்களையும் சாப்பிட முடியாது, முக அழகும் குறைந்துவிடும். ஆகவே பற்களை பாதுகாப்பது மிகமிக அவசியம்.

ஆலம் வேலும் பல்லுக்கு உறுதி என்றார்கள். ஆலம் விழுது, வேப்பங்குச்சி, கருவேலமரக்குச்சி ஆகியவற்றை உபபோகித்து பல் விளக்கினால் பல் பிரச்சினை ஏற்படாது. இவற்றிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். முடியாவிட்டடால் கருவேலம் பட்டை, வேப்பம்பட்டை பொடியை உபயோகிக்கலாம். இவையும் கிடைக்காவிட்டால், கடைகளில் விற்கப்படும் மூலிகைப் பொடிகளை உபயோகிக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் பற்பசைகளை உபயோகிக்கலாம்.

காலையில் பல்விளக்கிய பின் 5-10 மில்லி நல்லெண்ணெயை வாயில் விட்டு சில நிமிடங்கள் வரை கொப்பளித்து, எண்ணெய் நீர்த்தபின் துப்பிவிட வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்பும் பல்லை விளக்கிவிட்டு, வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து சில நிமிடங்கள் கொப்பளித்த பின் துப்ப வேண்டும்.

தினசரி காலை உணவிற்கு முன்பு சில தேங்காய் சில்களை நன்கு மென்று தின்றபின் ஓரிரு பேரிச்சம் பழங்கள் சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதியாகவும், வயிற்றில் உள்ள புண்னை ஆறுவதற்கும் இது நல்ல மருந்தாக பயன் படுகிறது.