FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: micro diary on November 17, 2011, 04:13:59 PM
-
கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...
* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.
* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.
* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.
* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:
* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.
-
nallapathivu ;)
micro inga kuttayathan mudi kaaranam inga ulla veegam.. neelamana koonthalai elamparamarika mudiyathu ... so kuttayana koonthalaithan naamvirumuram ;) :D
-
apple ponugaluku kunthal neelama iruntha than nalarukum
athikama mudi ulla ponugalathna enaku pidium ;) ;)
-
ukku venumna naan savuri mudi vachukuren ;D
-
enakaga nee ethai venalum seiya thayara irukiya ;)