எள்ளு சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp99.jpg&hash=cc871de879224f09a7b250033d546233043e80f5)
தேவையானவை:
கருப்பு எள்ளுத் தூள், நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, வெந்த சாதம், மிளகாய்த்தூள்.
செய்முறை:
எண்ணெயில் பூண்டு, வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் எள்ளு பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த சாதத்தைக் கலந்தால்... எள்ளு சாதம் தயார். மேற்கண்டவற்றை இடித்தும், சாதத்துடன் கலக்கலாம்.
பலன்கள்:
இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள், இதனை உண்டுவந்தால் குணமாகும்.
மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை பெறவும் உதவும்.