வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp95.jpg&hash=3be8d2a6438989da432239b70170f85c4f13560c)
தேவையானவை:
பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை - தலா 50 கிராம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பருப்பையும் கீரையையும் நன்றாக வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். வெங்காயம், கடுகு ஆகியவற்றைச் சிறிது உப்பு சேர்த்து தாளித்து இதனைக் கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்:
வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. விட்டமின் சி உடையது.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்பதன் மூலம் அதனைக் கட்டுக்குள் வைக்கலாம்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும்.