FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 02, 2013, 08:33:37 PM

Title: ~ வாழைப்பூ பருப்பு சூப் ~
Post by: MysteRy on November 02, 2013, 08:33:37 PM
வாழைப்பூ பருப்பு சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp92.jpg&hash=a36aff91beb98ca4574b47d83cd48af5b793bdc3)

தேவையானவை:
சிறிய வாழைப்பூ - 1, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்பொடி, சீரகம்.

செய்முறை:
பருப்பை முதலில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். எண்ணெயில் சீரகம், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை வதக்கிக்கொள்ளவும்.  பிறகு வாழைப்பூவை நன்றாக இடித்து, பருப்பையும் சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைந்தவுடன் தண்ணீரை மட்டும் வடிகட்டினால் அருந்தலாம்.

பலன்கள்:
 சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள் இதனைத் தினசரி குடித்துவந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். 
சிறுநீரகக் கற்களுக்கும் இது அருமருந்து.