வல்லாரைகோதுமை தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp91.jpg&hash=90ff2da60fc70c55770b63c3f440de1990e233c4)
தேவையானவை:
வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு.
செய்முறை:
கீரையை முதலில் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கோதுமை மாவை தோசைப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவேண்டும். தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.
பலன்கள்:
ஞாபகசக்தி அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது.