FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 02, 2013, 08:16:41 PM

Title: ~ வெந்தய தேங்காய்ப் பால் ~
Post by: MysteRy on November 02, 2013, 08:16:41 PM
வெந்தய  தேங்காய்ப் பால்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp89.jpg&hash=ecc78a349fc90f95be29bd693c2ae2292028ac86)

தேவையானவை:
வெந்தயம், துருவிய தேங்காய், இளநீர், இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கை சிறிதளவு, சர்க்கரை.

செய்முறை:
 வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். இதனால் கசப்புச் சுவை அறவே போய்விடும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் இளநீர் வழுக்கை ஆகியவற்றுடன் இளநீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்க வேண்டும். ஊறவைத்த வெந்தயத்தைத் தனியாக அரைத்து,  இளநீர் கலவையில் சேர்க்க வேண்டும். இதனுடன் (விருப்பப்பட்டால்) தேவையான சர்க்கரை கலந்து குடிக்கலாம். வெந்தயத்தின் பலனைப் பலர் அறிந்தாலும், அதன் கசப்புச் சுவை காரணமாகப் பலரும் விரும்புவது இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கவே இந்த வெந்தய-தேங்காய்ப் பால்.

பலன்கள்:
 வெந்தயம் உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும் இயல்புடையது.
அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் பலம் பெறும்.