FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: Global Angel on November 16, 2011, 05:42:26 PM

Title: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: Global Angel on November 16, 2011, 05:42:26 PM
அதென்ன கள்ளக்காதல் !!  

காதல் என்பது ஒன்றுதான், ஆனால் காதல் வயப்படுபவர்கள் யார் யார் என்பதை பொறுத்து காதலுக்கு சில காரணப் பெயர்கள் வைக்கப்படுவது நமது சமூகத்தில் விநோதமானது, 'கள்ளக்காதல்' என்பதற்குப் பொருள் ஏற்க்கனவே திருமணமான ஆணுடன் பெண்ணோ பெண்ணுடன் ஆணோ காதல் கொள்வதற்கு கள்ளக்காதல் என்று சொல்லுகிறார்கள், திருமணமாகாத இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் காதலுக்கு 'கள்ளமில்லாக் காதல்' என்பது அர்த்தமா? இவ்வாறு காரணப்பெயர்கள் சூட்டப்படுவது, சமுதாய விதியினை வலியுறுத்தும் செயலாகவும் கணக்கில் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் காதல் என்பது யார் வேண்டுமானானும் எதன் மீதும் கொள்ளும் அனிச்சையான செயல் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

மிருகங்கள் மீதும் பறவைகள் மீதும் செலுத்தப்படும் அன்பிற்கு என்ன பெயர், இயற்கையின் மீது மனிதனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கு என்னப் பெயர், ஆதிகாலத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த போது ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற வரையறை இல்லாதிருந்தது ஒரு பெண்ணிடம் பல ஆண்கள் உறவு கொண்டனர், பெண்ணிற்கு விருப்பமில்லாமலேயே உறவு கொண்டனர், இதனால் குழுக்களுக்குள் பிரச்சினைகளும் சண்டைகளும் ஏற்ப்பட்டன, நாளடைவில் சுயம்வரம் முறை உருவானது, மிருகங்களை வேட்டையாடி வீர தீர செயல்களை நிருபித்த பின்னர் பெண்ணை தனக்குறியவளாக ஆக்கிக்கொள்ளும் முறை உருவானது, அப்போதும் ஒரு ஆணுக்கு பல பெண்கள் ஏற்ப்படத்துவங்கினர்.

சமுதாயத்தில் நாகரீகங்கள் தோன்ற ஆரம்பித்த போது ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற நீதியை கடை பிடித்தனர், அந்நீதியை கடை பிடிக்காமல் இருந்தவர்களை துன்புருத்தியதோடு அவர்களுக்கு பலவிதங்களில் தண்டனைகளும் கொடுத்தனர், இன்னும் கூட வட இந்திய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஒரு பெண்ணின் கணவன் இறந்து போனால் அந்த பெண்ணின் கணவரின் அண்ணன் அல்லது தம்பி அந்த பெண்ணை திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளும் முறை நடப்பில் இருந்து வருகிறது. அரபு நாடுகளில் ஒரு ஆணுக்கு ஏழு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளும் முறை நடப்பில் உள்ளது, ஏற்க்கனவே திருமணமாகி கணவனை இழந்த கைப்பெண்ணாக இருந்தாலும் வயதில் ஆணை விட மூத்தவராக இருந்தாலும் அந்த பெண்ணை ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் முறையும் அங்கு நடப்பில் உள்ளது.

தமிழகத்தில் காணப்படும் முறை மாமனை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பல இந்திய மாநிலங்களில் இல்லாமல் இருப்பதும் தாய் மாமனை திருமணம் செய்யும் முறை கேரளா போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் இல்லை. தமிழகத்தில் தாயுடன் பிறந்த சகோதரிகளின் பிள்ளைகளையும் தகப்பனுடன் பிறந்த சகோதரர்களின் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கிடையாது, மாறாக அவர்களை சகோதர சகோதரி முறையாக கொள்வதே வழக்கம், இவ்வாறான வழக்கம் மேலை நாடுகளிலும் கூட வழக்கில் உண்டு, ஆனால் முகமதியர்கள் முறையில் இவர்களை சகோதர சகோதரிகளாக முறை கொள்வது கிடையாது மாறாக இவர்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக்கப்படுவது வழக்கில் உள்ளது.

இவ்வாறான பல வித வழக்கங்கள் ஒவ்வொரு சமுதாயத்திலும் வேறுபடுகிறது. கள்ள காதல் விவகாரம் என்பது இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதாக எல்லா சமுதாயத்தாலும் புறக்கணிக்கபட்டதாக உள்ளது. கணவனோ மனைவியோ தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவாதவராக இருப்பின் இத்தகைய தகாத உறவுகள் ஏற்ப்படுவது தவிர்க்க இயலாதது, கணவனது செயல்கள் மனைவிக்கோ மனைவியின் செயல்கள் கணவனுக்கு ஒத்து போகாத திருமண பந்தத்தை விவாகரத்து செய்வதே சிறந்தது. மனைவியின் தவறான போக்கும் கணவனின் தவறான போக்கும் வீணான சண்டைகளையும் சமாதானக் குறைவையும் ஏற்ப்படுத்தும் போது அந்த பந்தத்திலிருந்து தங்களை இருவரும் பிரித்துக் கொண்டு விடுவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

கள்ளக்காதலுக்காக கொலை செய்து விட்டு காலமெல்லாம் சிறை வாழ்க்கையில் இருப்பதை விட தகாத உறவு கொள்பவர்களை விட்டுவிட்டு தங்களது வாழ்க்கையை வேறுபடுத்திக்கொள்ளும் மனபக்குவம் பலருக்கு இல்லாமல் போவதும், பிரச்சினைகளால் கோப உணர்வுகள் மேலும் அதிகரித்து கொலை செய்ய தூண்டி விடுவதால் சம்பந்தப்பட்ட பலரும் வாழ்க்கையில் வேதனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு மன வலிமையையும், உடனிருப்பவர்களின் சரியான வழி காட்டுதலும் உதவும். காதலும் காமமும் சேர்ந்ததுதான் கள்ளக்காதலின் அடிப்படை, இதற்க்கு பலியானவர்கள் சம்பந்தப்பட்ட இருவராக மட்டுமே இருந்துவிட முடியாது, சம்பந்த பட்ட இருவர் மட்டுமே கள்ளகாதலினால் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க விட்டு விட்டு ஏனையோர் அதில் தலையிடாமல் இருந்து விட்டால் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்துவிடும். கோபத்தில் கொலை செய்வதால் பிரச்சினைகளை அடுத்தவர்களும் அனுபவிக்கும் சூழல் ஏற்ப்படும்.

கள்ளகாதலுக்கு பலியானவர்கள் சம்பந்த பட்ட இருவராக மட்டுமே இருந்தால்தான் 'உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்' என்பதற்கு ஏற்ப தவறு செய்தவர்கள் தண்டனை அடைய முடியும், இல்லையென்றால் தவறு செய்தவரை தண்டிக்கப் போனவர்களும் தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இடையில் சம்பந்தமே இல்லாத அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்படுகிறது. நான் பார்த்த ஒரு சிலரின் வாழ்க்கையில் அவர்களது மனைவிகளின் தகாத உறவால் மனைவி கள்ள காதலனுடன் சென்றுவிட குழந்தைகளுடன் தனிமைபடுத்தபட்ட கணவன் மனதில் வருத்தம் மிகுந்திருந்தும் வாழ்க்கையை கடத்தினர், தங்களது உதவிக்கு ஒரு பெண் வேண்டும் என்று வேறு ஒரு பெண்ணை தனது அப்பாவிற்கு திருமணம் செய்வித்த பிள்ளைகளுடன் வாழ்ந்து தன் வாழ்க்கையை கழித்த ஒருவரை பார்த்திருக்கிறேன், மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறார் அதனால் நானும் வேறு ஒரு பெண்ணை வைத்துக்கொள்வேன் என்று தன் வாழ்க்கையில் வேறு ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை மேலும் மோசமாக்கிகொண்ட ஒரு தகப்பனையும் பார்த்திருக்கிறேன், யாருடனோ மனைவி ஓடி போனால் போகட்டும் தன் பிள்ளைகளுடனேயே மீதி காலத்தை வாழ்ந்துவிட்டு இறந்த ஒரு தகப்பனையும் பார்த்திருக்கிறேன். இப்படி பலரை பார்த்திருந்தாலும், நான் சிலரை நினைத்து வருத்தமடைவதும் உண்டு, அவர்கள் ....

கொலை செய்துவிட்டு சிறைவாசம் செல்பவர்கள்....... யாருக்கு என்ன லாபம்...
Title: Re: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: RemO on November 17, 2011, 12:53:59 AM
nala pathivu angel
ipalam kaathala vida kalla kaathal than athikama iruku
ithavida kodumai uravumurai maathi kalla kathal varuthu ipalam
Title: Re: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: Global Angel on November 17, 2011, 01:06:07 AM
ahaaa enna athu uravu murai maaththi  ::)
Title: Re: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: RemO on November 17, 2011, 03:39:53 AM
i mean ipa konja naalaiku munala oru newa maamiyar oruvar than marumagan kuda kalla kaathal uruvaga atha kandicha maamanara , marumagan avan maamiyar kuda sernthu konutanga

ipa maamiyar & marumagan jail la

tamil kalacharam evalavu mosama pokuthu nu parunga
Title: Re: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: Global Angel on November 17, 2011, 03:52:43 PM
::) ayo ipdi vera  nadakuthaa
Title: Re: அதென்ன கள்ளக்காதல் !!
Post by: RemO on November 18, 2011, 12:41:53 AM
inum neraya iruku athelam inga venuma :D
rompa kevalama pokuthu tamil kalacharam