திப்பிலி ரசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp84.jpg&hash=863cd8311d37b9e7ee6096c86bbe9b3b8fb749d7)
தேவையானவை:
ரசப்பொடி, சீரகம், வறுத்த வெந்தயம், பெருங்காயம், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், புளி, திப்பிலி இலை - 4, பருப்புத்தண்ணீர், உப்பு, தாளிக்க: கடுகு, சீரகம், நெய்.
செய்முறை:
புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, ரசப்பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புத் தண்ணீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சின்னதாக நறுக்கிய திப்பிலி இலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். கடைசியாக நெய்யில் தாளித்துக் கொட்டி மூடவும்.
மாற்று முறை:
கரைத்துவைத்த புளித் தண்ணீரில் ரசப்பொடியைச் சேர்த்துக் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். திப்பிலி இலையை அரைத்து, பருப்புத் தண்ணீருடன் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும். கடைசியாகத் தாளித்துக் கொட்டி மூடவும்.
பலன்கள்:
சளித் தொல்லை, இருமல், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இந்த ரசத்தை இளஞ்சூட்டில் அருந்தலாம்.