பிரண்டைத் துவையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp82.jpg&hash=74abca259b3a3740a9953fb2751b24c800fb9cca)
தேவையானவை:
இளம் பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், எள்ளு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, மிளகு - 4, காய்ந்த மிளகாய் (அல்லது) பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை நுனிப்பகுதியில் இளசாக ஒடித்து, கணுக்களை நீக்கிவிட்டு, மற்ற பகுதிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், மிளகு, எள்ளு ஆகியவற்றைத் தனித்தனியே வதக்கி, எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு மிதமாக அரைத்துக்கொள்ளவும். விரும்பினால், கடைசியாக ஒரு சிறு துண்டு வெல்லம் போட்டுச் சுற்றி எடுக்கவும்.
குறிப்பு:
இதே முறையில், பிரண்டைக்குப் பதிலாக முடக்கத்தான் அல்லது கறிவேப்பிலை சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.
பலன்கள்:
மூட்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஓர் அருமருந்து.
இந்தத் துவையலை வாரத்துக்கு இரண்டு முறை என்று, நான்கு முதல் ஆறு வாரம் வரை சாப்பிட்டால், மூட்டுவலி பெரும்பாலும் குறைந்துவிடும்.