கேழ்வரகு இடியாப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp80.jpg&hash=80d93b349f4270a84cae22391ce2a78dec56760c)
தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு பங்கு, பச்சரிசி மாவு - ஒரு பங்கு.
செய்முறை:
கேழ்வரகு இடியாப்பத்துக்கு, முதலில் அது தயாரிப்பதற்கான மாவைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கேழ்வரகு மாவை, கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு, வாசம் வரும் வரை அல்லது நிறம் மாறும் வரை வறுத்து, ஆறவிடவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்க்கவும்.
இந்த மாவு அளவுக்கு 2 1/2 அல்லது 3 பங்கு தண்ணீரைப் பாத்திரத்தில்விட்டு, சிறிது உப்பு, நல்லெண்ணெய்விட்டுக் கொதிக்கவிடவும் (உதாரணமாக ராகி பச்சரிசி மாவு 1 கப் என்றால், தண்ணீர் 3 கப்). தண்ணீர் நன்றாக நடுக்கொதிநிலைக்கு வந்ததும், இடது கையால் அதைப் பிடித்து மாவில் ஊற்றிக்கொண்டே, வலது கையால் மாவைக் கிளறவேண்டும். நன்றாகச் சுருண்டு, மாவு பந்து போல வரும். அதே சூட்டோடு இடியாப்பக் குழலில் வைத்துப் பிழிந்து விடலாம்.
இந்த இடியாப்பத்தை வெங்காயம், வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சாப்பிடலாம். அல்லது சர்க்கரை, தேங்காய் கலந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை சேவை போல செய்தும் சாப்பிடலாம்.
பலன்கள்:
சிறு தானியங்களில் எல்லாமே சர்க்கரைச் சத்து, ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும் என்றாலும், கேழ்வரகில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், மெதுவாக ஜீரணித்து, ரத்தத்துடன் கலக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இடியாப்பம் சிறந்த உணவு.