இஞ்சி தேனூறல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp79.jpg&hash=10e95d64e7f9f994b1b68298ad29e22d62f57e86)
தேவையானவை:
இஞ்சி - 100 கிராம், தேன் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, மெல்லியதான வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு, அது மூழ்கும் அளவு தேனை ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடவும். நான்கு ஐந்து நாட்களில், அது நொதித்து, நுரைத்தாற்போல் வரும். இந்தச் செய்கை, நல்ல பாக்டீரியாவால் இப்படி நிகழும். ஏழு, எட்டு நாட்கள் கழித்து, நுரைத்தல் தானாகவே அடங்கிவிடும். 10 நாட்கள் கழித்து, தேனில் இஞ்சி நன்கு ஊறி இருக்கும். தினமும் ஒன்று எடுத்துச் சாப்பிடலாம். ஒரு முறை தயாரித்த தேனூறலை இரண்டு, மூன்று மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.
பலன்கள்:
இஞ்சி, வாதத்தைத் தடுக்கக்கூடியது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
செரிமானத்துக்கும் நல்லது.