FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on November 16, 2011, 05:34:39 PM
-
வருமுன் காப்போம்
உணவு என்பது மனிதனின் முக்கிய தேவை. உணவு உண்பதால் நாம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்கின்றோம், உணவை விரும்பி உண்பதற்காக, சுவையாக சமைக்க, பலவிதங்களில் உணவில் சுவையை உண்டாக்குவதற்க்கென பல பொருட்களின் துணையுடன் உணவை தயாரித்து உண்கின்றோம். ஆனால் அப்படி உணவின் சுவையை அதிகரிப்பதற்காக நாம் கண்டுபிடித்த பல பொருட்களினால் உடலுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்பதை நாம் சிந்தித்தோமா. காரம் புளிப்பு உப்பு கரம்மசாலா எண்ணெய் என இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நமது உடலுக்கு நன்மை என்ன தீமை என்ன என்பதை நாம் எப்போதாவது சிந்தித்து அதன்படி சமைப்பதற்கு முயலுவதுண்டா.
மனைவியோ அல்லது வீட்டில் வேறு யாரோ சமைக்கும் உணவு சுவையாக இல்லாவிட்டால் அவர்களை திட்டுவதும் உணவகத்திற்குச் சென்று நாவின் சுவைகேர்ப்ப உண்பதும் நமது வழக்கம். நாவின் சுவைக்காக உணவை பக்குவப்படுத்தி சமைத்து உண்ணுகின்ற அதே சமயத்தில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு எந்த விதத்தில் தீமை செய்கிறது என்பதைப்பற்றி நாம் அறிய முயன்றிருக்கின்றோமா. சுவைக்காக அதிகப்படியான உணவை உண்பதால் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா. உடலுக்கும் பசிக்கும் உணவு முக்கியம் என்பதைத்தவிர அதை எவ்வாறு உண்ணவேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது உண்டா.
உடலுக்கு ஏதேனும் நோய்கள் உண்டான பின்பு மருத்துவர் குறிப்பிட்ட உணவு வகைகளை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தினாலும் பலரால் பலவகையான ருசிகளை சாப்பிடாமல் இருப்பதற்கு முடிவதில்லை. இதற்க்கு காரணம் பழக்கம், பழக்கம் என்பது மனிதன் தனது சிறுவயது முதலே கைப்பற்றி வருவது. அவ்வாறு சாப்பிட்டு பழகியதால் அவ்வித சுவைகளை நாக்கு பழகி விடுகிறது. பின்னர் அத்தகைய சுவைகளுடன் கூடிய உணவைத் தவிர வேறு வகையான சுவை குறைவான உணவை ஏற்க்க மறுக்கிறது. உடல் நோய்வாய்பட்டு படுக்கையில் அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி உணவை உண்ணும் கட்டாயம் ஏற்படுகின்ற வரையில் அத்தகைய உணவுகளை உண்பதையே தங்களுக்கு திருப்தியளிப்பதாக கருதுகின்றனர்.
வாய்க்கு ருசியாக சமைத்து உண்போம் பிறகு நோய்வாய்பட்டு கிடக்கின்ற போது மருத்துவர் கூறும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. ஆனால் பலரது உடல்நிலை தங்கள் சாப்பிட்ட ருசியான உணவு வகைகளால் முற்றிலுமாக பாதிப்பிற்கு உள்ளான பின்பு மருத்துவர் கூறும் உணவு முறைகளை கைபற்றுவதினால் காலம் கடந்தநிலையால் உடல்நிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து குணமாக இயலாமலே போவதை காண முடிகிறது. அதிக காரம், உப்பு, சர்க்கரை, புளி, கரம் மசாலா போன்ற பலவகையான பொருட்களால் உடலுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை மாறாக தீமைகளே அதிகம் உண்டாகும், சிலர் இவற்றை அறிந்தும் சிலர் அறியாமலும் அதிகப்படியாக உட்கொண்டு தங்களது நாவை பழக்கப்படுத்திகொண்டு பின்னர் அவதியுறும் நிலைக்கு தள்ளப்படுவதை காண முடிகிறது.
உணவை அதிக சுவையுடன் சமைப்பதால் அதிகம் உண்பதற்கு ஆவலைத் தூண்டுவதனால் அதிகம் உண்பதால் ஏற்படுகின்ற உபாதைகளும் உடலில் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க இயலாமல் போகிறது. பசிக்கு உணவா ருசிக்கு உணவா என்பதையும் உணவே மருந்து மருந்தே உணவு என்பதையும் கைகொள்ள பழகுவதே வருமுன் நம் உடலை காக்கும் சிறந்த வழிகளாகும்.
-
nala pathivu angel
munnorkal unavai maruntha sonanga
ana ipa unavu than marunthu vanga vaikuthu