களாக்காய் ஊறுகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp77.jpg&hash=8f26dea754baa4db7cfd613278e337eae3f094dd)
தேவையானவை:
களாக்காய் - 100 கிராம், வெந்தயம் - 5 கிராம், கடுகு 3 கிராம், மிளகுத்தூள் - 20 கிராம், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், இந்துப்பு - மிகச் சிறிதளவு.
செய்முறை:
களாக்காயைக் கழுவி, கொட்டையை நீக்கி, நறுக்கி இந்துப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். வெறும் கடாயில் வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பொரிந்ததும், களாக்காயில் கொட்டி, வறுத்து பொடித்த வெந்தயம், கடுகைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நன்றாகக் கலந்துவிடவும். ஒரே வாரத்தில் நன்றாக ஊறி, ஊறுகாய் தயாராகிவிடும்.
மாற்று முறை:
மிளகுத்தூளுக்குப் பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் ஊறுகாய் தயாரிக்கலாம்.
பலன்கள்:
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
இதய நோய்க்கு மிகவும் நல்லது.
பொதுவாக, உயர் ரத்த அழுத்தம் மற்றும், இதய நோய் இருப்பவர்களை ஊறுகாயே சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால், மிளகுத்தூள் சேர்த்த களாக்காய் ஊறுகாயை உபயோகிக்கலாம்.