ஓமவல்லிப் பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp74.jpg&hash=c59e0534d0f77b771d5e4b6c370c9cb564f9e4a7)
தேவையானவை:
ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, மிளகு - 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் - அரை டீஸ்பூன், தயிர் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.
செய்முறை:
கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய ஓமவல்லி இலை அல்லது கற்பூரவல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு முறை வதக்கி, அடுப்பை அணைக்கவும். இல்லையெனில் இலை மிகவும் வெந்துவிடும். இதனுடன் இஞ்சி, தேங்காய், உப்பு, ஒரு கரண்டி தயிர் விட்டு அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
பலன்கள்:
மழைக் காலத்தில் சுவாசப்பாதை சீராகும். அலர்ஜி, ஜலதோஷத்தை விரட்ட சிறந்தது.
தோல் சம்பந்தமான அலர்ஜி, உணவு அலர்ஜிக்கு ஓமவல்லி சிறந்தது. ஜீரணத்துக்கும் நல்லது.