(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp54a.jpg&hash=47b9f25a5c021cd7e6eb4f7d14453438f83eca43)
நடிகை ஓவியா சொல்லும் அழகு ரகசியம்!
''தலைமுடியை எப்படிப் பராமரிக்கிறீங்க?''
''எனக்கு நிறையத் தலைமுடி இருந்தது. சமீபத்தில்தான் ஹேர்கட் பண்ணிக்கிட்டேன். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்ச்சு நல்லா மசாஜ் பண்ணுவேன். எப்பல்லாம் முடியுதோ, அப்பல்லாம் ஹேர் ஸ்பா எடுத்துப்பேன். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து மூடி முந்தின நாள் இரவு வெச்சிடணும். காலையில் வெறும் வயிற்றில் இந்தத் தண்ணீரைக் குடிக்கணும். தினமும் இந்த வெந்தய வாட்டர் குடிச்சிட்டு வந்தால், முடி உதிராது, பொடுகு பிரச்னையும் இருக்காது. முடியும் அடர்த்தியா வளரும். உடம்புக்கும் குளிர்ச்சி.''
''முக வசீகரத்துக்குக் காரணம்?''
வெயில்ல வர்றப்ப முகம் ரொம்ப டல்லா இருக்கும். அப்ப, கொஞ்சம் தயிர்ல லெமன் ஜூஸ் கலந்து முகத்துல மசாஜ் பண்ணுவேன். பத்து நிமிஷம் கழிச்சு முகம் கழுவினால், சூப்பர் ஃப்ரெஷ்ஷா இருக்கும். தினமும் காலைல ஒரு டீஸ்பூன் தேன் குடிப்பேன். அரை ஸ்பூன் தேன்ல, ரெண்டு ஸ்பூன் பன்னீர் சேர்த்து நல்லா கலக்கி முகம், கழுத்து, கைகள்ல தேய்ச்சு, பத்து நிமிஷம் ஊறவெச்சிக் கழுவிப்பேன். சருமத்தோட நிறம் மாறி, 'பளிச்’னு ஆயிடும்.''