FTC Forum
Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on October 31, 2013, 10:47:42 PM
-
இன்றைய ராசி பலன்கள் - 31/10/2013
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயா ருக்கு மருத்துவச் செலவு கள் வந்து போகும். புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவு கள் எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
துலாம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட் டுப் பிடியுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
விருச்சிகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
தனுசு: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.
கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியா பாரத்தில் பணிகளால் டென்ஷன் ஏற் படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைகூறுவார்கள். எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள்.
மீனம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்னை ஓயும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.