கீரை +சோளம்....'சூப்'பரான கூட்டணி !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Foct%2F09102009%2Fav174.jpg&hash=a73ffc18c31014aa51b9c63a0c355f191f663b16)
தேவையானவை:
முருங்கைக்கீரை - 2 கப், வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா 1, உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் சோளம், பால் - தலா அரை கப், பூண்டு - 4 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
காய்களை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாக சுத்தம் செய்து வெங்காயம், உருளைக் கிழங்கை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் இறக்கி, பிரஷரை மெதுவாக குறைத்துவிட்டு ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோளத்தை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டு சேர்த்து பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள கீரையைச் சேர்க்கவும். வேக வைத்த சோளம், பால், உப்பு சேர்த்து, 2 நிமிடம் கிளறி, கொதித்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.