எளிய இயற்கை மருத்துவம்:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/544103_630547750300877_183259193_n.jpg)
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
எளிய இயற்கை மருத்துவம்:-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1461617_648449521844033_272147686_n.jpg)
கால் எரிச்சல் குணமாக : கால் எரிச்சல் குணமாக சுரைக்காய் சதையை வைத்து கட்டினால் குணமாகும்.
பித்தவெடிப்பு குணமாக : மாசிக்காய், கடுக்காய் விளக்கெண்ணெய், வெப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சமமாக கலந்து தடவ குணமாகும்.
இரத்த போக்கு நிற்க : நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர இரத்த போக்கு உடனே நிற்கும்.
காயங்கள் ஆற : புங்கமரத்தின் இலையை தூள் செய்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி தேங்காய் கலந்து காயத்தின் மீது தடவி வர குணமாகும்.
வண்டு கடிக்கு : துளசி இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்றுப்போட்டால் எந்த வண்டு கடித்தாலும் விஷம் முறிந்து குணமாகும்.
எளிய இயற்கை மருத்துவம்:-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1425738_650717188283933_1167120801_n.jpg)
கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.
உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.
அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.
சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்குநீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.
திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும். காயமும் சீக்கிரம் ஆறும்.
வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்.
மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.
கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.
வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.
பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.
காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.
கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.
பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.
பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்.
எளிய இயற்கை மருத்துவம்:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/1521557_659805454041773_565668471_n.jpg)
* கொத்தமல்லித் தழை நிறைய கிடைக்கும் காலங்களில் தயிர் பச்சடியாய் தினமும் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவடையும்.
* சப்பாத்திக்கள்ளி பூவை கழுவி சுத்தம் செய்து விழுதாக அரைக்க வேண்டும். அந்த விழுதை கட்டியின் நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து ரணம் தானாக ஆறிவிடும்.
* கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
* குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும் இடத்தில் தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்குகள் நீங்கும்.
* மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும். சொறி, சிரங்கு, நமைச்சலும் இதை தடவிவர போகும்.
* கண் நோயினால் அவதிப்படும் போது புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றி பற்றுப் போடவும். கண் சிவப்பு, கண்வலி நீங்கி குணமாகும்.
* ரோஜா மொட்டை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி முதலிய வெப்ப நோய்கள் நீங்கும். சீதபேதி குணமாகும்.
* சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல் முதலியவைகளினால் அவதிப்படுகிறவர்கள் செம்பருத்திப்பூ ஐந்து, செம்பருத்தி இலை ஐம்பது கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு, கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலை மாலை இரண்டு அவுன்ஸ் பருகிவர, சிறுநீர் எரிச்சல் கடுகடுப்பு நீங்கும்.
* வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட, ஆசனக் கடுப்பு நீங்கும், ரத்த மூலமும், இருமலும் நின்று போகும்.
எளிய இயற்கை மருத்துவம்:-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/923544_706331142722537_311840295_n.jpg)
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.
10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.
11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.
12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.
13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.
19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.