FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 29, 2013, 11:08:31 AM

Title: இந்திய விஞ்ஞானி சாதனை புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு
Post by: kanmani on October 29, 2013, 11:08:31 AM
வாஷிங்டன் : விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ‘பிக் பேங்’ என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது.  இது குறித்து விதால் தில்வி கூறுகையில், ‘‘உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி  பல கேள்விகளை எழுப்பியுள்ளது’’ என்றார்.