FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 28, 2013, 08:28:35 PM

Title: ~ பப்பாளியின் மருத்துவப் பண்புகள்! ! ! ! ~
Post by: MysteRy on October 28, 2013, 08:28:35 PM
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்! ! ! !

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/969161_541942922553675_1208583595_n.png)


* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.

* பித்தத்தைப் போக்கும்.

* உடலுக்குத் தென்பூட்டும்.

* இதயத்திற்கு நல்லது.

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

* கல்லீரலுக்கும் ஏற்றது.

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

* இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்.

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.